தமிழக முதல்வரை தவிர வேறு யாருமே இந்த கனமழை பேரிடர் காலத்தில் ஒழுங்காக வேலை செய்யவில்லை என்று நடிகையும் செயற்குழு உறுப்பினருமான குஷ்பு தெரிவித்துள்ளார்.
சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரை சாலையில் அமைந்துள்ள டுமீல் குப்பம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் 500 பேருக்கு பிரெட் மட்டும் பால் பாக்கெட்டுகளை பாஜக செயற்குழு உறுப்பினர் குஷ்பு வழங்கினார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் “தமிழக முதல்வரை தவிர தமிழக அரசியல் வேறு யாரும் இந்த கனமழை பேரிடர் காலத்தில் ஒழுங்காக வேலை செய்யவில்லை. கொளத்தூர் பகுதியில் பிரச்சனை இல்லையா? அங்கு தண்ணீர்தேங்கவில்லையா? அதிமுக காலத்தில் ஏற்பட்ட சூழல், திமுக ஆட்சியில் ஏற்படவில்லையா? திமுகதான் ஊழல் கட்சி என்று குஷ்பு தெரிவித்தார்.
மேலும் நடிகர் சூர்யா தொடர்பான சர்ச்சை குறித்து கேட்டபோது அது குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனவும், நான் படம் பார்த்துவிட்டு தெரிவிக்கிறேன் என்றும் கூறினார். இதில் குஷ்பு செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த பெண்மணி ஒருவர் ஐந்து கிலோ அரிசி கொடுத்து இருந்தால் கூட புரோஜனமாக இருந்திருக்கு.ம் இந்த பிரட் மட்டும் பால் ஒரு வேலைக்கு கூட தாங்காது என்று கூறினார். அதற்கு உறுதியாக செய்கிறோம் என குஷ்பு அவரிடம் தெரிவித்தார்.