திருவண்ணாமலையில் நடைபெற்ற திமுக கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள காஞ்சி ரோடு, அன்வராபாத் கிராமப் பகுதி மக்கள் 18 பேர் மினி லாரியில் வந்தனர். திருவண்ணாமலை அருகேயுள்ள புனல்காடு பகுதியில் வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் வாகனத்தில் பயணம் செய்த 16 பேர் படுகாயமடைந்தனர். இதனையடுத்து காயமடைந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.காயமடைந்தவர்களில் பெண் ஒருவர் கவலைக்கிடமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. விபத்தில் காயமடைந்தவர்களை திமுகவைச் சேர்ந்த செங்கம் சட்டப்பேரவை உறுப்பினர் கிரி நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.மேலும், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், இச்சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.