தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், சில நாட்களாகவே மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் தமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டதனால் இன்று ஒரு சில பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
இந்த நிலையில் கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக நாளை திருப்பத்தூர், காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.