பிரிட்டனில் நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் நடந்த உரையில் அவையில் கட்டுப்பாடின்றி தொடர்ச்சியாக பேசிக்கொண்டிருந்த பிரதமரை அவைத்தலைவர் சத்தமிட்டு உட்கார வைத்துள்ளார்.
பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தை சேர்ந்த உறுப்பினர்கள் பிற பணிகளை செய்வது தொடர்பில் விவாதம் நடந்துள்ளது. அப்போது எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள், பிரதமர் போரிஸ் ஜான்சனிடம் தொடர்ந்து பல கேள்விகளை கேட்டனர். ஆனால் பிரதமர் அந்த கேள்விகளுக்கு பதிலளிக்காமல், அவர்களை எதிர்த்து மீண்டும் கேள்விகளை கேட்டார்.
எனவே, அவைத் தலைவரான லிண்ட்சே, பிரதமரிடம் எதிர்க்கட்சியினர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்குமாறு கூறினார். ஆனால் பிரதமர், இது பிரதமரிடம் கேட்கக்கூடிய கேள்விகள் கிடையாது என்று அதனை மறுத்ததோடு, தொடர்ந்து அவையில் பல கேள்விகளை கேட்டுக்கொண்டிருந்தார்.
எனவே பொறுமையிழந்த அவைத்தலைவர், “அமைதியாக அமருங்கள், நீங்கள் நாட்டிற்கு பிரதமராக இருந்தாலும், இந்த அவைக்கு நான் தான் பொறுப்பு என்று கோபமாகக் கூறி உட்கார வைத்திருக்கிறார்.