பேருந்து மோதி பெண் தொழிலாளி உயிரிழந்தது குறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை அடுத்துள்ள அனக்கூரில் பாப்பாத்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நெட்டவேலாம்பாளையத்தில் உள்ள தனியார் நூற்பாலையில் வேலை பார்த்து வந்த பாப்பாத்தி வழக்கம்போல நிறுவனத்தில் பேருந்தில் வேலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் பாப்பாத்தி பேருந்தின் பின்புறம் நின்று கொண்டிருந்தபோது டிரைவர் பேருந்தை பின்னோக்கி இயக்கியுள்ளார்.
அப்போது பாப்பாத்தி மீது பேருந்து மோதி அவர் படுகாயமடைந்தார். இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் பாப்பாத்தியை மீட்டு ஈரோடு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பாப்பாத்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் இதுகுறித்து தகவலறிந்த வெப்படை காவல்துறையினர் பேருந்து டிரைவர் கணபதி மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.