Categories
அரசியல் மாநில செய்திகள்

கேள்வி மேல் கேள்வி கேட்டு திமுகவை மடக்கும் குஷ்பு…. சென்னை மேயராவாரா….? அதிரடி காட்டுமா பாஜக…!!!

சென்னை மாநகராட்சி மேயர் வேட்பாளராக பாஜக குஷ்புவை களம் இறக்குமா பாஜக என்று கேள்வி எழுப்பியுள்ளது.

நடிகை குஷ்பு மீண்டும் அரசியலில் இறங்கியுள்ளார். சென்னை நகரில் வெள்ளம் பாதித்த பகுதிகளை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார். திமுகவையும் முதல்வர் ஸ்டாலினையும் சரமாரியாக கேள்வி கேட்டு வருகிறார். அவர் சென்னை மேயர் தேர்தலில் பாஜக வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்று கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் முதலில் திமுகவில் இருந்த குஷ்பூ கட்சியில் ஏற்பட்ட சில பூசல்கள் காரணமாக அங்கிருந்து வெளியேறினார். பின்னர் காங்கிரஸில் சேர்ந்த போது அங்கு மாநில தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு உரிய அங்கீகாரத்தை கொடுத்தனர். அதை சரியாகப் பயன்படுத்தினார்.

இருப்பினும் அங்கிருந்து வெளியேறிய குஷ்பு பாஜகவில் சேர்ந்தார். பாஜகவில் சேர்ந்து முதல் தீவிரமாக அரசியல் செய்து வருகிறார். அவருக்கு சட்டசபை தேர்தலில் எதிர்பார்த்த தொகுதி இல்லாமல் கடினமான தொகுதியை கொடுத்த போதிலும், சலைக்காமல் அங்கு தீவிர பிரச்சாரம் செய்தார். கடைசி நொடி வரை விடாமல் முயற்சி செய்தார். தேர்தலில் தோற்றாலும் அவர் எதிர்த்தரப்பினருக்கு கடும் நெருக்கடியைக் கொடுத்தார். குஷ்புவின் பலமே அவரது நேரடி பேச்சு தான். எதையும் பூசி முழுகுவது இல்லை. வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு என்று பேசுவது அவருக்கு பலம்.

இப்படிப்பட்ட தனித்த ஆளுமை கொண்ட தலைவர்கள் கட்சியில் இருப்பது கட்சிக்கு சேர்க்கும் பலம்தான். இப்படிப்பட்ட குஷ்புவை சென்னை மாநகராட்சி மேயர் தேர்தலில் வேட்பாளராக பாஜக அறிவிக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மு.க.ஸ்டாலின் தொடர்ந்து சரமாரியாக கேள்வி கேட்டு வருகிறார். குஷ்பு சென்னை வெள்ள பாதிப்பு ஏற்பட்ட போதும் அவர் முக ஸ்டாலினிடம் பல கேள்விகளை எழுப்பி வருகிறார். மேலும், மு க ஸ்டாலின் மேயராக இருந்துள்ளார். உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்துள்ளார். தற்போது முதல்வராக இருக்கிறார். இப்படிப்பட்டவர் ஏன் சென்னை நகர வெள்ளத்திற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை? கொளத்தூரில் நிலைமை ஏன் மோசமாக உள்ளது என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு அவரை மடக்கி வருகிறார்.

தனது சொந்தத் தொகுதியிலேயே வெள்ளம் இன்னும் வரவில்லை. இப்படிப்பட்டவர் எப்படி தமிழகத்தை பாதுகாக்க முடியும் என்று கேள்வி எழுப்பி வருகிறார். நல்ல இமேஜ் கொண்ட குஷ்புவை சென்னை மேயர் வேட்பாளராக நிறுத்தினால் அவருக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும். ஆனால் கடந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் பணிக் குழுவில், குஷ்பு பெயரை பாஜக சேர்க்கவில்லை. அப்படி இருக்கும்போது சென்னை மேயர் பதவியை உடனே தூக்கி கொடுத்து விடுமா? என்று கேள்வியும் எழுகின்றது. ஆனால் இப்போதைய நிலைமையில் பாஜக சார்பில் ஒருவரை மேயர் தேர்தலில் நிறுத்தலாம் என்றால் குஷ்பு அதற்கு தான் சரிப்பட்டு வருவார்” என்பது பலரின் கருத்தாக உள்ளது.

Categories

Tech |