Categories
மாநில செய்திகள்

JUSTIN:  9-வது மெகா தடுப்பூசி முகாம்… 8.36 லட்சம் பேருக்கு தடுப்பூசி…  அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல்…!!!

தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக செயல்படுத்தப்படும் வருகிறது. மக்களுக்காக ஆங்காங்கே தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தற்போதுவரை ஒன்பது தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இவை அனைத்திலும் மக்கள் அனைவரும் ஆர்வமுடன் வந்து தடுப்பு ஊசி செலுத்தி கொண்டுள்ளனர். ஒவ்வொரு முகாமிலும் அரசு நிர்ணயித்த இலக்கை விட அதிக அளவு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

அந்தவகையில் இன்று நடைபெற்று முடிந்த 9-வது தடுப்பு முகாமில் மொத்தம் 8.36 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அமைச்சர் மா சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். இந்த முகாமில் 74 சதவீதம் பேருக்கு முதல் டோஸ்சும், 37 சதவீதம் பேருக்கு இரண்டாம் டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |