Categories
உலக செய்திகள்

“பஃபேயில் அனைத்து உணவுகளையும் தின்று தீர்த்த நபர்!”.. புலம்பும் உணவக உரிமையாளர்.. சீனாவில் ருசிகர சம்பவம்..!!

சீனாவில் இருக்கும் பிரபல உணவகத்தில் அதிகமாக சாப்பிட்டுக்கொண்டே இருந்த நபரை இனி உணவகத்திற்குள் வரக்கூடாது என்று உணவக உரிமையாளர் கருப்பு பட்டியலில் இணைத்துள்ளார்.

சீன உணவகங்களில் பஃபே என்ற முறையில் ஒரு நபர் குறிப்பிட்ட தொகையை செலுத்திவிட்டு அங்கிருக்கும் பல வகை உணவுகளை அளவின்றி உண்ணலாம். இந்நிலையில் அங்குள்ள பிரபல  உணவகத்திற்கு காங் என்ற யூடியூபர் வழக்கமாக செல்வாராம். இவர் அதிகமாக சாப்பிடக் கூடியவர்.

இந்நிலையில், சமீபத்தில் அந்த உணவகத்திற்கு சென்ற காங், அதிகமான உணவு வகைகளை வாங்கி சாப்பிட்டுக் கொண்டே இருந்துள்ளார். தட்டுத் தட்டாக நிறைய உணவுகளை காலி செய்ததால், இனிமேல் கடைக்கு வரவேண்டாம் என்று கூறிய உணவக உரிமையாளர், அவரை கருப்பு பட்டியலில் சேர்த்து விட்டார்.

இது குறித்து காங் தெரிவிக்கையில், “என்னால் நிறைய சாப்பிட முடியும். அதில் என்ன தவறு இருக்கிறது? நான் எந்த உணவையும் வீணாக்கவில்லை. முதல் தடவை அந்த உணவகத்திற்கு சென்ற போது, 1.5 கிலோ பன்றி இறைச்சியை முழுவதுமாக சாப்பிட்டு விட்டேன். அடுத்த முறை 4 கிலோ இறால் மீனை சாப்பிட்டேன்.

நிறைய சாப்பிடுபவர்கள் உணவகத்திற்குள் வரக்கூடாது என்பது பாரபட்சமக உள்ளது என்று கூறியிருக்கிறார். உணவக உரிமையாளர் கூறுகையில், காங், எங்கள் உணவகத்திற்கு வரும் போதெல்லாம் நஷ்டம் ஏற்படுகிறது. ஒவ்வொரு முறை வரும்போதும், 20-திலிருந்து 30 பாட்டில்கள் சோயாபால் அருந்துகிறார்.

பன்றி இறைச்சியை மொத்தமாக சாப்பிட்டு விடுகிறார். இறால்களை பொதுவாக குச்சியை வைத்து தான் உண்பார்கள். ஆனால் இவரோ முழுமையாக அப்படியே சாப்பிட்டு விடுகிறார். இவர் மட்டுமன்றி, என் உணவகத்திற்குள் இனிமேல் யூடியூபர் எவரும் வரக்கூடாது என்று தடை விதித்திருப்பதாக கூறியிருக்கிறார்.

Categories

Tech |