Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: 18 கி.மீ வேகத்தில்…. நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்…!!!

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி கரையை கடக்கும் என்று இந்திய ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. ஆனால் காற்றழுத்த தாழ்வு பகுதி ஆனது தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது சென்னை அருகே வட தமிழகம், தெற்கு ஆந்திராவிற்கு இடையே நாளை அதிகாலை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் சென்னையில் இருந்து 150 கிலோ மீட்டர் தெற்கு தென்மேற்கு திசையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளதாகவும், 18 கிலோ மீட்டர் வேகத்தில் நகரும் தாழ்வு மண்டலம் நாளை அதிகாலை சென்னை- புதுச்சேரி இடையே கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Categories

Tech |