கில்லி படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்த நடிகர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் நடிப்பில் கடந்த 2004-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் கில்லி. தரணி இயக்கியிருந்த இந்த படத்தில் திரிஷா கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் பிரகாஷ் ராஜ், ஆசிஷ் வித்யார்த்தி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இந்த படத்தின் மூலம் நடிகர் விஜய் ஆக்சன் ஹீரோவாக மாறினார். மேலும் இந்த படம் தான் விஜய்யின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இந்நிலையில் கில்லி படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தது நடிகர் அஜித் தானாம். ஒரு சில காரணங்களால் அஜித்தால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனதாக கூறப்படுகிறது.