Categories
திண்டுக்கல் மாநில செய்திகள்

குண்டு விளாயட வந்திருக்கோமா? தாசில்தாரை திட்டிய திண்டுக்கல் சீனிவாசன் …!!

தாசில்தார் செல்போனில் பேசியதைக் கண்டு நிகழ்ச்சி மேடையில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கோபமடைந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதியில் தமிழ்நாடு அரசின் சார்பில் குறைதீர்ப்பு கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நத்தம் பேருந்து நிலையம் அருகேயுள்ள அம்மா சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது.மாவட்ட ஆட்சித் தலைவர் விஜயலட்சுமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நிகழ்ச்சி மேடையில் அமைச்சர் சீனிவாசன் பேசத்தொடங்கும் முன்பு தனக்கு எதிரே அமர்ந்திருந்த நத்தம் தாசில்தார் செல்போனில் பேசியதை கவனித்த அமைச்சர், தாசில்தாரிடம் நாங்கள் இங்கே குண்டு விளையாட வந்துள்ளோமா. சிறிது நேரம் தொலைபேசியில் பேசுவதை நிறுத்தி வைக்கலாமே என்று கடிந்து கொண்டார்.

பொதுமக்கள் முன்னிலையில் தாசில்தாரை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் திட்டி பேசியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.இதனைத்தொடர்ந்து பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனீவாசன், “தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் இருப்பது எங்களுக்கு தான் நஷ்டம். உள்ளாட்சித் தேர்தலில் மக்களின் நம்பிக்கையை பெறுவோம்” என்று தெரிவித்தார்.

Categories

Tech |