Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தேங்காய் பறித்து கொண்டிருந்த தொழிலாளி…. திடீரென நடந்த விபரீதம்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி….!!

மின்சாரம் தாக்கி தொழிலாளி காயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அய்யப்பநாயக்கன்பாளையம் பகுதியில் ஆயிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் மரம் ஏறும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் நாவீதன்புதூரில் உள்ள சிதம்பரம் என்பவரது தோப்பில் ஆயிமுத்து மற்றும் சிலர் தோப்பில் தேங்காய் பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு மரத்தில் ஏறி ஆயிமுத்து தேங்காய் குழையை வெட்டும் போது எதிர்பாராத விதமாக அரிவாள் தென்னை மரத்தை உரசியபடி இருந்த உயர் அழுத்த மின் கம்பியில் பட்டது. இதனால் ஆயிமுத்துவை மின்சாரம் தாக்கி இடுப்புக்கு பயன்படுத்தும் இடைக்கயிற்றில் தொங்கினார்.

இதனையடுத்து ஆயிமுத்துவை தேங்காய் பறித்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் விரைந்து சென்று ஏணியை பயன்படுத்தி ஆயிமுத்துவை கீழே விழாமல் பிடித்துக் கொண்டனர். இதுகுறித்து அங்கிருந்தவர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் பொதுமக்கள் உதவியுடன் இடைக்கயிற்றில் தொங்கியபடி இருந்த ஆயிமுத்துவை பத்திரமாக மீட்டனர். இதனையடுத்து ஆயிமுத்து தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றார். இச்சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |