ஹரியானாவைச் சேர்ந்த மருத்துவர் மிட்டல் என்பவர் பசுமாட்டின் சாணம் ருசித்து சாப்பிடும் மற்றும் கோமியம் குடிக்கும் வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்து அந்த மருத்துவர் மிட்டல் கூறுகையில், மாட்டுச் சாணத்தை சாப்பிட்டால் நம்முடைய மனதும் உடலும் சுத்தமாகும். நம்முடைய ஆன்மா சுத்தமாகும்.
மேலும் பெண்கள் மாட்டு சாணத்தை சாப்பிடுவதால் அவர்களுக்கு பிரசவ காலத்தில் சுகப்பிரசவம் ஏற்படும் என தெரிவித்துள்ளார். தொடர்ந்து கூறிய அவர் கோமியத்தில் தங்கம் இருப்பதாகவும் சிரித்துக்கொண்டே கூறியுள்ளார். இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகப் பரவியதையடுத்து இதற்கு பலரும் பலவிதமாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
https://twitter.com/i/status/1460301443332644869