என்ன சொல்ல போகிறாய் படத்தின் இரண்டாவது பாடல் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன்-2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் அஸ்வின். இதற்கு முன் இவர் சீரியல்கள், குறும்படங்கள், ஆல்பம் பாடல்களில் நடித்து வந்தார். தற்போது ஹரிஹரன் இயக்கியுள்ள என்ன சொல்ல போகிறாய் படத்தின் மூலம் அஸ்வின் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ரொமான்டிக் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் தேஜு அஸ்வினி, அவந்திகா மிஸ்ரா இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.
#FollowMe – the second single from #EnnaSollaPogirai is releasing on Nov 20th✨
THAT, is the surprise!❤️#FirstOfMany@i_amak @ImHharan #Ravindran @iamviveksiva @MervinJSolomon @TejuAshwini9 @Avantika_mish @VijaytvpugazhO @Muzik247in @Richardmnathan pic.twitter.com/o8LFWH0Lqg
— Trident Arts (@tridentartsoffl) November 18, 2021
மேலும் குக் வித் கோமாளி பிரபலம் புகழ் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு விவேக்- மெர்வின் இசையமைத்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், முதல் பாடல், டீஸர் ஆகியவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் என்ன சொல்ல போகிறாய் படத்தின் இரண்டாவது பாடல் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஃபாலோ மீ’ என்ற பாடல் நவம்பர் 20-ஆம் தேதி வெளியாக உள்ளது.