Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

நடைபெற்ற போராட்டம்….. மாணவர்களின் கோரிக்கை…. திருவண்ணாமலையில் பரபரப்பு…..!!

பேருந்து நிலையம் முன்பு மாணவர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சேத்துப்பட்டு மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து மாணவ – மாணவிகள் தென்னாங்கூரில் இருக்கும் கல்லூரியில் படித்து வருகின்றனர். இதனை அடுத்து மாணவர்கள் அரசு பேருந்து தடம் எண் : 148 – ல் பயணம் செய்தனர். இந்நிலையில் அந்த பேருந்து ஒரு சில நேரங்களில் தாமதமாகும், நிறுத்தப்பட்டும் இருக்கின்றது.

இதனால் ஆத்திரமடைந்த மாணவ மாணவியர்கள் திடீரென பேருந்து நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதன்பிறகு மாணவ-மாணவியர்கள் பேருந்து நிலையத்திலிருந்து கலைந்து சென்றுவிட்டனர்.

Categories

Tech |