Categories
Uncategorized தேசிய செய்திகள்

2025 ஆம் ஆண்டு பாக்கிஸ்தானில் சாம்பியன் டிராபி….. இந்தியா பங்கேற்குமா?…. அனுராக் தாகூர் பதில்….!!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஒருநாள் போட்டி உலக கோப்பை, 20 ஓவர் உலக கோப்பை மற்றும் சாம்பியன் டிராபி ஆகிய மூன்று போட்டிகளை நடத்தி வருகிறது. இந்நிலையில் 2024 முதல் 2031 வரை நடைபெற உள்ள ஐசிசி போட்டி விவரங்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது. அதில் 2025 ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டி நடத்தும் வாய்ப்பு பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நாடு கடைசியாக 1996ஆம் ஆண்டு ஒருநாள் போட்டி உலக கோப்பையை இந்தியா இலங்கையுடன் இணைந்து நடத்தியது. 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஐசிஐ பெரிய போட்டியை பாகிஸ்தான் நடத்துகிறது. இந்நிலையில் பாகிஸ்தானில் நடைபெற உள்ள சாம்பியன் டிராபி போட்டியில் இந்தியா பங்கேற்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து மத்திய மந்திரி அனுராக் கூறியது, கடந்த காலங்களில் பல நாடுகள் பாதுகாப்புக்காக பாகிஸ்தானில் இருந்து விலகி இருந்தது.

அங்கு விளையாடும்போது வீரர்கள் தாக்கப்பட்டு பெரிய பிரச்சனை ஆகும். எனவே சர்வதேச சாம்பியன்ஷிப் போட்டிகள் நடத்தப்படும் போது பல்வேறு விஷயங்களை கருத்தில் கொண்டு நேரம் வரும் போது என்ன செய்வது என்று பார்ப்போம். மேலும் பாதுகாப்பு நிலைமையை அப்போது மதிப்பீடு செய்து முடிவு செய்வோம். அதுமட்டுமில்லாமல் பாகிஸ்தான் செல்வது குறித்து மத்திய உள்துறை அமைச்சகமே முடிவு எடுக்கட்டும் என்று அவர் கூறினார்.

Categories

Tech |