வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி கரையை கடக்கும் என்று இந்திய ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. ஆனால் காற்றழுத்த தாழ்வு பகுதி ஆனது தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது சென்னை அருகே வட தமிழகம், தெற்கு ஆந்திராவிற்கு இடையே நாளை அதிகாலை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் சென்னையில் இருந்து 150 கிலோ மீட்டர் தெற்கு தென்மேற்கு திசையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளதாகவும், 18 கிலோ மீட்டர் வேகத்தில் நகரும் தாழ்வு மண்டலம் நாளை அதிகாலை புதுச்சேரி- சென்னை இடையே அதிகாலை 3 முதல் 6 மணி வரை கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் போது 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். சென்னைக்கு 100 கிலோமீட்டர் புதுச்சேரிக்கு 120 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. மேலும் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விலக்கப்பட்டு ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.