Categories
தேனி மாவட்ட செய்திகள்

குடிநீர் வழங்காததால் அவதி… பொதுமக்கள் தர்ணா போராட்டம்… பேரூராட்சி அலுவலகத்தில் பரபரப்பு…!!

குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள 18-வார்டு மக்களுக்கும் வைகை அணையின் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஒரு மாத காலமாக 12வது வார்டு பகுதியில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதி பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டு வந்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே 12வது வார்டு பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்திற்கு திரண்டு சென்று குடிநீர் விநியோகம் செய்யுமாறு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை அறிந்த பேரூராட்சி செயல் அலுவலர் சின்னசாமி மற்றும் அதிகாரிகள் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். மேலும் உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். இதற்குப் பின்னரே பொதுமக்கள் தர்ணா போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |