திரைப்பட இயக்குனரும், சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளருமான கோவி. மணிசேகரன்(95) வயது மூப்பு காரணமாக காலமானார். 1992ல் இவர் எழுதிய வரலாற்றுப் புதினமான குற்றால குறவஞ்சி தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றது. இவர் எட்டு நாடகங்கள், 29 சிறுகதைத் தொகுப்புகள், 50 வரலாற்றுப் புதினங்களை எழுதியுள்ளார். கே.பாலசந்தரிடம் உதவி இயக்குனராக இருந்த இவர் தென்னங்கீற்று படத்தை இயக்கியுள்ளார். இவருடைய மறைவிற்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Categories