தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. அதன்பிறகு மாணவர்களின் நலன் கருதி அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த கல்வி ஆண்டு களில் எடுக்கப்பட்ட மதிப்பெண்களை வைத்து பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியிடப்பட்டது.
12ஆம் வகுப்பு மதிப்பெண் குறைவாக உள்ளதாக கருதும் மாணவர்களுக்கு துணைத்தேர்வு நடத்தப்பட்டது. இந்த நிலையில் பிளஸ் 2 துணைத் தேர்வர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் நவம்பர் 25 ஆம் தேதி வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. மேலும் மாணவர்கள் தேர்வு மையங்களில் மதிப்பெண் சான்றிதழை பெற்று கொள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ளது.