மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர் சுனில் லகேதே. அவருடைய மகள் பெங்களூருவில் தங்கி பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கொரோனா காரணமாக கடந்த சில மாதங்களாக நாக்பூரில் உள்ள தனது வீட்டில் இருந்தபடியே அவர் பணியாற்றி வருவதால் பெங்களூருவில் தங்கி இருந்த வீட்டை காலி செய்துவிட்டு அங்கிருந்த பொருட்களை எல்லாம் கொரியர் மூலம் பார்சல் செய்துள்ளார்.
இதனையடுத்து சம்பவத்தன்று பார்சல் வந்ததும் அதை லகேதே ஒவ்வொன்றாக பிரித்து கொண்டிருந்த போது ஒரு பார்சல் பெட்டியில் இருந்து நல்ல பாம்பு ஒன்று தலையை தூக்கிய நிலையில் இருந்துள்ளது. இதனால் அதிர்ந்துபோன அவர், அந்த பெட்டியை வெளியே எடுத்துச் சென்ற போது அதிலிருந்த பாம்பு வெளியே வந்தது. உடனே பாம்பு பிடிப்பவரை அழைத்து சோதனை செய்ததில் அந்த பாம்பு பிடிபடாமல் ஓடியிருக்கிறது. இந்த சம்பவம் அந்த குடும்பத்தினரிடையே பெரும் அதிர்ச்சியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.