பெங்களூரு விவசாய அறிவியல் பல்கலைகழகம் சார்பில் கடந்த 11ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை கிரிஷ்ஸி மேளா என்ற நிகழ்ச்சி நடந்தது. இதில் விவசாய பெருமக்கள் தங்கள் கால்நடைகள் மற்றும் விவசாய பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்தனர். மொத்தம் 550 ஸ்டால்கள் அமைக்கப்பட்டு அங்கு பல்வேறு விவசாய பொருட்கள் விற்பனைக்கு வந்தன. அப்போது அங்கு ஒரு ஸ்டாலில் விற்பனைக்கு வந்த “ஹலிக்கர்” இன காளை ரூ1 கோடிக்கு விலை போனது. பொதுவாகவே காளை மாடுகள் அதிகம் விலைபோகாது.
ஆனால் குறிப்பிட்ட ரகத்தை சேர்ந்த காளை மாடுகள் மற்ற காளை இனத்தின் தலைமை காளை என்பதால் இந்த இன காளைகளுக்கு மார்கெட்டில் மவுசு ஜாஸ்தி, இந்த காளையின் இனப்பெருக்க விந்து முறை எடுப்பதற்கு ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படுகிறது. மற்ற காளைகள் எல்லாம் ரூ1 முதல் 2 லட்சத்திற்கு விற்பனையான நிலையில் இந்த காளை மட்டும் ரூ.1 கோடிக்கு விற்பனையாகியுள்ளது.