இங்கிலாந்தின் தலைநகரிலுள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றின் முன்பாக அந்நாட்டு காவல்துறை அதிகாரிகள் குவிக்கப்பட்டுள்ளார்கள்.
இங்கிலாந்து நாட்டின் தலைநகராக லண்டன் திகழ்கிறது. இதனையடுத்து லண்டனிலுள்ள ஆக்ஸ்போர்ட் என்னும் தெருவில் மிகவும் பிரபலமாக சூப்பர் மார்க்கெட் ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் சூப்பர் மார்க்கெட்டின் முன்பாக கத்தியைக் கொண்டு மர்ம நபர் ஒருவர் சுற்றி திரிவதாக காவல்துறை அதிகாரிகளுக்கு புகார் கிடைத்துள்ளது. அந்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறை அதிகாரிகள் சூப்பர் மார்க்கெட்டின் முன்பாக அதிரடியாக சோதனையில் இறங்கியுள்ளார்கள்.
ஆனால் எந்த ஒரு நபரும் கத்தியை கொண்டு சுத்தி தெரியாததால் காவல்துறை அதிகாரிகள் எவரையும் கைது செய்யவில்லை. இருப்பினும் சூப்பர் மார்க்கெட்டின் முன்பாக ஆயுதங்களை கொண்டு பல காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பிற்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளார்கள்.