டைரக்டர் யுவராஜ் தயாளன் படத்தில் நயன்தாரா நடிப்பதாக இருந்தது. தற்போது அவருக்கு பதிலாக ஷ்ரத்தா நடிக்கிறாங்க.
போட்டா போட்டி, தெனாலிராமன், எலி ஆகிய படங்களை இயக்கிய யுவராஜ் தயாளன் படத்தில், நடிகர் நயன்தாரா கமிட்டாகி இருந்தாங்க. தற்போது அவருக்கு பதிலாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறார். அட்லி இயக்குகிற இந்தி படத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானுடன் சேர்ந்து நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். அங்கு அவரோட பையன் போதை, மருந்து, வழக்கு, சிறை என்று பஞ்சாயத்தில் போனதினால், ஷாருக்கானுடன் சேர்ந்து நடிப்பதில் தேதி சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
நயன்தாரா இல்லாத காட்சிகளை யுவராஜ் ஏற்கனவே ஷுட் பண்ணதனால் பாலிவுட் பட செட்யூல் முடித்து விட்டு நயன்தாரா திரும்ப வருவார் என்று சூட்டிங் டீம் வெயிட் பண்ணியுள்ளது. ஆனால் நயன்தாரா நார்த் இண்டியாவில் லாக் ஆகி உள்ளார்கள். அதனால் நயன்தாராவை தூக்கிட்டு ஷ்ரத்தா ஸ்ரீநாத்தை வைத்து கிளப், கேமரா, ஆக்ஷன், சூட் என்று படத்தை எடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.