Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்… ரூ. 14,00,00,000 வசூல்… கல்லாகட்டிய கோவில் குத்தகை பணம் …!!

தமிழகத்தில் கோவில்களில் கணினிவழி வாடகை வசூல் மையங்கள் தொடங்கப்பட்டு இதுவரை 14 கோடி ரூபாய் வரை வசூல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் முதல் இணைய வழி முறையில் 5,720 கோவில்களில் வாடகைதாரர்கள் வாடகை தொகையினை செலுத்தும் வசதி தொடங்கி வைக்கப்பட்டது. கணினி மூலம் வாடகை குத்தகை செலுத்த இயலாத குத்தகைதாரர்கள், வாடகைதாரர்கள், வழக்கும் போல் கோவில் அலுவலகத்தில் தொகையை செலுத்தி கணினி மூலம் ரசீதியினை பெற்று கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

வாடகை வசூல் மையம் அமைக்க இயலாத நிலையில் அருகில் கோவில்களில் வாடகை செலுத்த விரும்புவோர் அருகில் உள்ள பெரிய கோவில்களில் அமைந்துள்ள வசூல் மையத்தில் தொகையினை செலுத்திக் கொள்ளலாம் என்ற வழிவகையும் செய்யப்பட்டுள்ளது. இதுவரை வாடகை வசூல் மையங்கள் மூலமாக இதுவரை 14 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |