ஒரே நாடு ஒரே சட்டப்பேரவை நடை முறையை அறிமுகப்படுத்துவது நமது நாடலுமன்ற நடைமுறைக்குத் தேவையான தொழில்நுட்ப ஊக்கத்தை அளிக்கும் என்பதுடன் நாட்டின் அனைத்து ஜனநாயக அமைப்புகளையும் இணைக்கவும் உதவும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
சிம்லாவில் நடைபெற்ற 82-வது அகில இந்திய பேரவை தலைவர்கள் மாநாட்டின் தொடக்க விழாவில் காணொளி மூலம் பேசிய பிரதமர் நரேந்திரமோடி, இந்திய மதிப்பீடுகளுக்கேற்ப சட்டம் இயற்றுபவர்களின் நடத்தை இந்திய மதிப்பீடுகளுக்கேற்ப இருக்க வேண்டும் எனவும், நாடாளுமன்ற கூட்டத் தொடர்களின்போது உறுப்பினர்களால் பல்வேறு வழக்காரங்கள் எழுப்பப்பட்டு இடையூறுகள் ஏற்படுத்தப்படுகிறது எனவும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்திய மதிப்பீடுகளுக்கேற்ப நடந்துகொள்ள வேண்டும் எனவும், குறிப்பிட்டார்.
நமது சட்டப்பேரவைகளின் பாரம்பரியங்களும், நடைமுறைகளும், இந்தியர் என்ற உயிருடன் இருக்க வேண்டும் எனவும் இதில் ஏற்றப்படும் சட்டங்களும் அரசின் கொள்கைகளும் “ஒரே பாரதம் உன்னத பாரதம்” என்ற உணர்வை வலுப்படுத்தும் வகையில் இருக்க வேண்டும் எனவும் ஆக்கபூர்வமான ஆரோக்கியமான விவாதங்களுக்கு என சட்டப்பேரவையில் தனி நேரம் ஒதுக்கப்பட வேண்டியது அவசியம்.
ஜனநாயகம் என்பது இந்தியாவுக்கு வெறும் நடைமுறை மட்டுமல்ல அது இந்தியாவின் இயல்பு எனவும் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து பேசிய மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா நாட்டில் உள்ள அனைத்து சட்டப்பேரவை களுக்கும் ஒரே மாதிரியான விதிகள் மற்றும் நடைமுறைகளை பரிந்துரைக்கும் வகையில் மாதிரி ஆவண பதிவேட்டை உருவாக்க வேண்டியது அவசியம் என தெரிவித்தார்.