மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று தாயின் ஆரோக்கியத்தில் நீங்கள் தனி கவனம் செலுத்த வேண்டும். தடைபடும் காரியங்களை கண்டு தன்னம்பிக்கையை மட்டும் இழந்து விடாதீர்கள். முயற்சி திருவினையாக்கும் என்று முன்னேற முயலுங்கள். வெற்றி எப்பொழுதுமே உங்கள் பக்கம் தான். இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் வியாபார வளர்ச்சிக்காக துணிச்சலுடன் சில முக்கிய முடிவுகளை எடுக்கக் கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற வாய்ப்புகள் வந்துசேரும்.
சக ஊழியர்கள் மேல் அதிகாரிகளின் ஆதரவுடன் பணிகளை திறமையாக செய்து முடிப்பீர்கள். கலை துறையை சார்ந்தவர்களுக்கு தொழிலில் இருந்த சிக்கல்கள் தீரும். சின்ன சின்ன வாக்குவாதங்கள் மட்டும் அவ்வப்போது வந்து செல்லும் பார்த்துக்கொள்ளுங்கள். மாணவர்கள் கல்வியில் முன்னேறுவதற்கு எந்தவித தடையும் இருக்காது. இருந்தாலும் ஆசிரியர்களின் சொல்படி மட்டும் நடந்து கொள்ளுங்கள் அது போதும். சக மாணவரிடம் பழகும் போது நிதானமாக பழகுங்கள்.
இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு சிறப்பு வாய்ந்த நிறமாக இருக்கும். அது மட்டுமில்லை இன்று வெள்ளிக்கிழமை என்பதால் 7 நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக வழங்குங்கள். வெள்ளிக்கிழமை வெள்ளிக்கிழமை நீங்கள் தயிர் சாதத்தை அந்த தானமாக வழங்கினால் அனைத்தும் சிறப்பாக நடக்கும். உங்களுடைய கர்ம தோஷங்களும் நீங்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் வெள்ளை நிறம்
ரிஷபம் ராசி அன்பர்களே..!! இன்று மனதில் தைரியமும் புதிய தகவல்களால் புதிய உற்சாகமும் பிறக்கும். மனைவியின் ஒத்துழைப்பு மன மகிழ்ச்சி கொடுக்கும். முகநூல் மூலம் நட்பு வட்டம் விரிவடையும். நண்பர்கள் உதவிகள் உங்களுக்கு கிடைக்கும். புதிய உத்தியோக வாய்ப்புகள் ஏற்படும். இன்று குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் கூடும். பிள்ளைகளின் செயல்பாடுகள் திருப்திகரமாக இருக்கும். மனவருத்தத்துடன் சென்ற உறவினர்கள் வருத்தம் நீங்கி மீண்டும் வந்துசேர்வார்கள். பயணங்கள் செல்ல நேரிடும்.
எந்த பிரச்சினை வந்தாலும் அதை சமாளிக்கும் திறமை உண்டாகும். அடுத்தவர்களின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். எதிலும் அளவோடு ஈடுபட்டு வந்தால் தொல்லைகள் இருக்காது. இன்றைய நாள் ஓரளவு முன்னேற்ற கரமாகவே இருக்கும். இன்று மாணவர்கள் கொஞ்சம் கடுமையாக உழைத்து பாடங்களை படிக்க வேண்டும். படித்த பாடத்தை ஒரு முறைக்கு இரு முறை எழுதிப் பார்ப்பது மிகவும் சிறப்பாக இருக்கும்.
இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடியதாக இருக்கும். அது மட்டுமில்லை இன்று வெள்ளிக்கிழமை என்பதால் 7 நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக வழங்குங்கள். எப்பொழுதுமே வாராவாரம் வெள்ளிக் கிழமையானால் 7 நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக வழங்கி வாருங்கள். இந்த தான முறையை நாம் கடைபிடித்தால் கர்ம தோஷத்தில் இருந்து நாம் விடுபட முடியும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்
மிதுனம் ராசி அன்பர்களே..!! இன்று நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சிகள் அனைத்துமே வெற்றியை கொடுக்கும். தனவரவு தாராளமாக இருக்கும். ஆரோக்கியம் சீராக இருக்கும். நினைத்த காரியங்கள் நினைத்தது போல் நடக்கும். புத்தி சாதுரியம் மற்றும் வாக்கு வன்மையால் உங்களுடைய பொருளாதார நிலை மேம்படும். ஆராய்ச்சியாளர்களுக்கு அருமையான நாளாக இன்று இருக்கும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது மட்டும் நல்லது.
குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்பாடுகள் உங்களுக்கு கோபத்தை தூண்டுவதாக இருக்கும். அனைவரையும் அனுசரித்துச் செல்லுங்கள் அது போதும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் முன்னேற்றத்திற்காக பாடுபடுவீர்கள் பூர்வீக சொத்துக்களில் இருந்த சிக்கல்கள் தீரும். இன்றைய நாள் ஓரளவு முன்னேற்றகரமான நாளாகவே இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை விலகிச்செல்லும்.
ஆசிரியர்களின் சொல்படி மட்டும் நடந்து கொள்ளுங்கள் அது போதும். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது நீலநிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடியதாக இருக்கும். அது மட்டுமில்லை இன்று வெள்ளிக்கிழமை என்பதால் 7 நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக வழங்குங்கள். தயிர்சாதம் உங்களுடைய கர்ம தோசங்கள் அனைத்தையும் நீக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் வெள்ளை நிறம்
கடகம் ராசி அன்பர்களே..!! எந்த விஷயத்திலும் நியாயமாக நடக்க வேண்டிய நாளாகவே இன்று இருக்கும். உடல் நிலையில் கொஞ்சம் கவனமாகவே இருங்கள். அஜீரண கோளாறு போன்றவை ஏற்படக்கூடும். வயிற்றில் உப்புசம் கொஞ்சம் இருக்கும். தயவு செய்து மனைவியிடம் கொஞ்சம் அன்பாக நடந்து கொள்ளுங்கள். மற்றவர்களிடம் பேசும் பொழுது பகை ஏற்படக்கூடிய சூழல் இருப்பதால் கொஞ்சம் கவனமாகவே நடந்து கொள்ளுங்கள். அதிகாரிகளிடம் பணிவாக நடந்து கொள்ளுங்கள். இன்று மன அமைதி இருக்கும். எல்லோரும் உங்களிடம் அன்பாக நடந்து கொள்வார்கள். திட புத்தியும் பல வழிகளில் உழைத்து சம்பாதிக்கும் திறமையும் ஏற்படும். இன்று பணவரவு எதிர்பார்த்ததைவிட கூடுதலாகத்தான் இருக்கும்.
உங்களுடைய பேச்சில் இனிமை சாதுரியத்தால் எடுத்த காரியத்தை திறம்படவும் செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் பணிச் சுமையை ஏற்க வேண்டியிருக்கும். மேலதிகாரிகளிடம் உங்களது கருத்துக்களை தெரிவிக்கும் பொழுது கவனமாக பேசுவது நல்லது. பணி நிமிர்த்தமாக பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். பயணங்கள் உங்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும். குடும்பத்தாருடன் எந்தவித கருத்து வேறுபாடுகள் இல்லாமல் கொஞ்சம் நிதானமாகப் பேசுங்கள் அது போதும்.
இன்று மாணவக் கண்மணிகள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். அதுமட்டுமில்லாமல் விளையாட்டு துறையில் ஆர்வம் செல்லும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடியதாக இருக்கும். அது மட்டுமில்லை இன்று வெள்ளிக்கிழமை என்பதால் 7 நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுப்பதற்கு நீங்கள் முயற்சி செய்யுங்கள். உங்களுடைய கர்ம தோசங்கள் அனைத்தும் நீங்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு
அதிஷ்ட எண் : 2 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் பச்சை நிறம்
சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று தொழில் மற்றும் வியாபாரம் சம்பந்தமாக பெரியோர்களின் சந்திப்பு இனியதாக அமையும். எண்ணியபடி எண்ணிய காரியங்கள் ஏற்றத்தைக் கொடுக்கும். பெண்களால் நன்மை உண்டாகும். அதுபோக நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும். இன்று காரிய தடையால் மனக்குழப்பம் டென்சன் போன்றவை இருக்கும் அதை மட்டும் நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள். பொறுமையாக செயல்படுங்கள். பணவரவை பொருத்தவரை இன்று சிறப்பாகவே இருக்கும். மாணவர்கள் யாரிடமும் எந்தவித வாக்குவாதம் செய்யாமல் அனுசரித்து செல்வது நலம் பயக்கும்.
மிகவும் கவனமாக பாடங்களை மட்டும் படியுங்கள் வெற்றிக்கு உதவும். இன்றைக்கு கொஞ்சம் தடை தாமதம் வீண் அலைச்சல் இருக்கும். எப்பொழுதுமே நீங்கள் நிதானமாக இருந்தால் அனைத்து காரியமும் சிறப்பாக இருக்கும். துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுக்கக்கூடும். கூடுமானவரை பெரியவர்களிடம் ஆலோசனை கேட்டு செய்யுங்கள். உங்கள் பேச்சிற்கு மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். பஞ்சாயத்துக்கள் சொல்வீர்கள். அந்த பஞ்சாயத்துக்கள் நல்ல முடிவை கொடுக்கும். இன்று நீங்கள் செய்யக்கூடிய காரியங்களுக்கு நிதானத்தை மட்டும் பின்பற்றினால் அனைத்துமே சிறப்பாக இருக்கும்.
ஒருமுறைக்கு இருமுறை யோசனை செய்யுங்கள் தப்பில்லை. இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்ககூடியதாக இருக்கும். அது மட்டுமில்லை வாராவாரம் வெள்ளிக் கிழமையானால் 7 நபர்களுக்கு தயிர் சாதத்தை மட்டும் அன்னதானமாக கொடுங்கள். உங்களுடைய கர்ம தோசங்கள் அனைத்தும் நீங்கும். நீங்கள் செய்யக்கூடிய காரியங்கள் வெற்றி ஏற்படும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு
அதிஷ்ட எண் : 6 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் வெள்ளை நிறம்
கன்னிராசி அன்பர்களே..!! இன்று தொழில் புரிவோருக்கு வீண் செலவுகளும் பணமுடையும் ஏற் படக் கூடியதாக இருக்கும். உணவு உண்ணவும் நேரமின்றி உழைப்பு அதிகமாகும். நேர் வழிகளில் பணம் செலவு செய்தால் மனம் நிம்மதி பெருகும். கூடுமானவரை தேவையில்லாத பொருட்களை தயவுசெய்து வாங்க வேண்டாம். இன்று கோபத்தை குறைத்துக் கொண்டால் அனைத்து விதமான பிரச்சினைகளும் தீரும். சிக்கல்களும் தீரும். இன்று பொருட்களை கவனமாக பார்த்துக்கொள்வது நல்லது. அடுத்தவருடன் சில்லறை சண்டைகள் கொஞ்சம் ஏற்படக்கூடும். உடல் ரீதியில் வயிறு தொடர்பான நோய் கொஞ்சம் ஏற்படலாம்.
சரியான நேரத்திற்கு தயவுசெய்து உணவை எடுத்துக்கொள்ளுங்கள். பணவரவும் இருக்கும். பயணங்கள் ஓரளவு மகிழ்ச்சியை கொடுப்பதாகவே இருக்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். எதிர்பார்த்தபடி பழைய பாக்கிகள் வசூலாகும். கொடுக்கல் வாங்கலில் கூட கொஞ்சம் நல்ல முன்னேற்றம் இருக்கும். மற்றவருடன் இருந்து வந்த பகை நீங்கும். இருந்தாலும் எப்பொழுதுமே கொஞ்சம் கவனமாகவே நீங்கள் செயல்படுங்கள். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமடைய கொஞ்சம் கூடுதலாகத்தான் உழைக்க வேண்டியிருக்கும்.
விளையாட்டுத் துறையில் ஆர்வம் செல்லும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் வாரம் வாரம் வெள்ளிக்கிழமையானால் 7 நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுப்பதற்கு பழகிக் கொள்ளுங்கள். இது உங்களுடைய கர்ம தோஷங்கள் அனைத்தையுமே நீக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு
அதிஷ்ட எண் : 3 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்
துலாம் ராசி அன்பர்களே..!! இன்று மனமகிழ்ச்சியும் வேதனையும் சரி பங்காக நடக்கும் நாளாகவே இருக்கும். இன்று புண்ணிய காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். தெய்வீக நம்பிக்கையால் தேகத்தில் புதிய தெம்பும் உற்சாகமும் ஏற்படும். உல்லாச பயணங்கள் செல்ல நேரிடும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணப்படும். விளையாட்டு போட்டியில் வெற்றி வாய்ப்புகள் உண்டாகும். எதிலும் கவனமாக இருப்பது மட்டும் நல்லது. காரியத்தில் இருந்த தடை தாமதம் நீங்கும். குடும்பத்தில் இருக்கும் குழப்பம் நீங்கும். உங்களுடைய விருப்பத்திற்கு மாறாக காரியங்கள் நடக்கக்கூடும். மன குழப்பம் உண்டாகலாம் பார்த்துக்கொள்ளுங்கள்.
அடுத்தவர்களுடைய விவகாரங்களில் தயவுசெய்து தலையிட வேண்டாம். பகைவர்கள் பணிந்து போகும் வாய்ப்பு உண்டாகும். கூடுமானவரை மற்றவர் பிரச்சினைகளில் இருந்து இன்று விடுபடுவது நல்லது. அதாவது பஞ்சாயத்துக்கள், யாரிடமும் எதுவும் பேசாமல் இருப்பது நல்லது. கூடுமானவரை உத்தியோகத்தில் உள்ளவர்கள் வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மை கொடுக்கும். இன்று குடும்பத்தில் ஓரளவு தான் கலகலப்பு காணப்படும்.
பிரச்சினைகளை சரி செய்வதற்கு முயற்சிகளையும் மேற்கொள்வீர்கள். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் வாரம் வாரம் வெள்ளிக் கிழமையானால் 7 நபர்களுக்கு தயிர் சாதத்தை மட்டும் அன்னதானமாக கொடுங்கள் அது போதும். உங்களுடைய கர்ம தோஷங்கள் அனைத்துமே நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக்கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு
அதிஷ்ட எண் : 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்
விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று பண வரவால் மனம் பரவசப்படும் நாளாக இருக்கும். ஆடை ஆபரணங்கள் அலங்காரப் பொருட்கள் சேரும். காதல் ஈடுபாட்டால் கவலைகளை மறந்து களிப்பு அடைவீர்கள். அரசாங்க ஆதரவு மற்றும் உதவிகள் தடையின்றி கிடைக்கும். இன்று சோர்வில்லாமல் உற்சாகமாக காணப்படுவீர்கள். உல்லாச பயணங்களும் செல்ல நேரிடும். நல்ல பெயரும் புகழும் உண்டாகும். புண்ணிய காரியங்களில் ஈடுபாடு இருக்கும். வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பங்களை இன்று நீங்கள் சந்திக்க நேரலாம்.
எப்படிப்பட்ட பிரச்சினை வந்தாலும் சமாளித்து விடும் திறமை இருக்கும். அரசியல் துறையினர் விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். நண்பர்களுடன் மனத்தாங்கல் வரக்கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். வேலையாட்களால் சின்னதாக பிரச்சினை வரக்கூடும். கூடுமானவரை நீங்கள் பேசும்போது நிதானத்தைக் கடைப்பிடித்தால் அனைத்தையும் நாம் சரி செய்து விடலாம். இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமடைய கொஞ்சம் கூடுதலாகத்தான் உழைக்க வேண்டியிருக்கும். விளையாட்டுத் துறையில் இன்று ஆர்வம் செல்லும்.
இன்று கூடுமானவரை ஆசிரியர்களின் சொல்படி மட்டும் கேட்டு நடந்து கொள்ளுங்கள். சக மாணவருடன் எந்தவித வாக்குவாதங்களும் வேண்டாம். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். அது மட்டுமில்லை வாரம் வாரம் வெள்ளிக்கிழமையானால் 7 நபர்களுக்கு தயிர்சாதத்தை அன்ன தானமாக வழங்குங்கள். உங்களுடைய கர்ம தோஷங்கள் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு
அதிஷ்ட எண் : 4 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்
தனுசு ராசி அன்பர்களே..!! இன்று தன வரவு கூடும் நாளாக இருக்கும். எதிரிகள் பணிந்து செல்வார்கள். எதிர்ப்புகள் குறையும். நண்பர்கள் உதவி உங்களுக்கு நன்மையை கொடுக்கும். நீங்கள் எண்ணிய காரியங்கள் எண்ணிய படியே நடக்கும். பெயரும் புகழும் ஓங்கி நிற்கும். புதிய பெண் சினேகம் புத்துணர்ச்சியைக் கொடுக்கும். இன்று மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செலவுகள் மட்டும் கூடும்.
கல்வியில் முன்னேற வேண்டும் என்பதை குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவீர்கள். எதிர்ப்புகள் விலகி செல்லும். காரியத்தில் அனுகூலமும் ஏற்படும். முக்கிய நபர்களின் உதவிகள் கிடைக்கும். விஐபிக்களின் சந்திப்பு கிடைக்கும். இன்று தன்னம்பிக்கை கூடும். துணிச்சலுடன் செயல்பட்டு எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகள் நலனில் அக்கறை கொள்வீர்கள். இன்றைய நாள் கூடுமானவரை நீங்கள் மனம் மகிழ்ச்சியாகவே காணப்படுவீர்கள்.
இருந்தாலும் இன்று முக்கிய பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். அதுமட்டுமில்லை வாரம் வாரம் வெள்ளிக்கிழமையானால் 7 நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்ன தானமாக கொடுங்கள். உங்களுடைய கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ யோகத்தை ஏற்படுத்திக்கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்
மகரம் ராசி அன்பர்களே..!! இன்று பயணங்களில் மட்டும் கவனம் இருக்கட்டும். குழந்தைகளுக்கு மருத்துவ செலவுகள் இன்று ஏற்படலாம் பார்த்துக்கொள்ளுங்கள் கவனித்துக்கொள்ளுங்கள். எவ்வளவு திறமையுடன் செயல்பட்டாலும் உங்கள் திறமை பாராட்டுக்களை இன்று பெறாது. கவனமாக படித்தால் கல்வியில் வெற்றிகளை மாணவர்கள் குவிக்கலாம். கூடுமானவரை மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும். இன்று பணவரவு ஓரளவு இருக்கும். இடம் மாற்றம் வெளியூர் மாற்றம் போன்றவை இருக்கும். பயணங்கள் அலைச்சல் தரக் கூடிய அளவில் இருக்கும்.
தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்வதற்கு கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். உடல் நிலையை நீங்கள் கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள். வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் வரக்கூடும். அரசு தொடர்பான காரியங்களில் ஓரளவே சாதகமான பலன்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கட்டளை இடுகின்ற பதவிகள் கிடைக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு வேலை கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் ஓரளவு வந்து நீங்கும். இன்றையநாள் நீங்கள் கொஞ்சம் கடுமையாக உழைத்தும் நிதானமாக இருந்தும் இன்றைய நாளை கடக்க வேண்டும்.
கூடுமானவரை ஆலயம் சென்று வாருங்கள் மனம் நிம்மதி ஆகவே இருக்கும். அது மட்டுமில்லை இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். அதுபோலவே வாரம் வாரம் வெள்ளிக்கிழமையானால் 7 நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக வழங்குங்கள் உங்களுடைய கர்ம தோஷங்கள் அனைத்தும் நீக்கி செல்வ யோகத்தை ஏற்படுத்திக்கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு
அதிஷ்ட எண் : 5 மற்றும் 8
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் ஊதா நிறம்
கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று உங்களுக்கு சுமாரான நாளாகத்தான் இருக்கும். கூடுமானவரை ஆலயம் சென்று வாருங்கள் அது போதும். ஆலயவழிபாடு உங்கள் மனதை நிம்மதி கொள்ள வைக்கும். சுக சௌக்கியத்திற்கு பங்கம் கொஞ்சம் விளையும். எதிர்பார்த்த இடங்களில் பணவரவு தாமதப்பட்டு தான் வந்து சேரும். எதையும் சாதிக்கும் திறமை இன்று இருக்கும். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். யாரிடமும் எதிர்த்துப் பேசி விரோதத்தை மட்டும் வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நன்மை கொடுக்கும்.
கணவன் மனைவிக்கு இடையே இருந்த பிரிவு நீங்கி ஒன்று சேருவீர்கள். பிள்ளைகள் எதிர்காலம் பற்றிய எண்ணம் மேலோங்கும். எதிலும் வேகமாக செல்லவேண்டும் என்ற எண்ணம் தோன்றும். யாருக்கும் எந்தவிதமான சாட்சிக் கையெழுத்து போடவேண்டாம் பார்த்துக்கொள்ளுங்கள். கூடுமானவரை வாக்குறுதிகளையும் கொடுக்க வேண்டாம் கவனம் கொள்ளுங்கள். இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேறுவதற்கு கொஞ்சம் கடுமையாக உழைத்து பாடங்களைப் படியுங்கள். படித்த பாடத்தை கூடுமானவரை எழுதிப் பாருங்கள்.
இன்று சக மாணவரிடம் பழகும் போது நிதானமாக பழகுங்கள். ஒற்றுமை மேலோங்குவது மிகவும் நல்லது. இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். அதுபோலவே இன்று வெள்ளிக்கிழமை என்பதால் 7 நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள். உங்களுடைய கர்மங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக்கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 7
அதிர்ஷ்டநிறம் : பச்சை மற்றும் வெள்ளை நிறம்
மீனம் ராசி அன்பர்களே..!! இன்று புதிய உத்தியோக வாய்ப்புகள் உங்கள் இல்லம் தேடி வரும். பதவி உயர்வு பணப்பயன் உயர்வு போன்றவை எதிர்பார்க்க கூடும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கையில் இனிய மாற்றங்களை சந்திக்க கூடும். இன்று சமூகத்தில் உங்களுக்கு மதிப்பும் புகழும் ஓங்கி நிற்கும். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். இன்று எந்த ஒரு செயலையும் தைரியமாகவே செய்து முடிப்பீர்கள். எதிர்பாரத வகையில் திடீர் செலவுகளும் வீண் அலைச்சலும் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள்.
மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற வேண்டும் என்ற சிந்தனை உருவாகும். கொஞ்சம் கஷ்டமான பாடங்களை நீங்கள் மனம் துவளாமல் படிப்பீர்கள். குடும்ப பிரச்சினைகள் சரியாகும். காரிய தடை விலகி செல்லும். பணவரவு தாராளமாக இருக்கும். அரசாங்கம் மூலம் லாபம் உண்டாகும். நீண்டதூரப் பயணங்களால் சாதகமான பலன்கள் கிடைக்கும். மனமும் மகிழ்ச்சியாகவே காணப்படும்.
இன்றைய நீங்கள் நினைத்தது நடக்கும் நாளாகவே இருக்கும். இருந்தாலும் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். அதுபோலவே இன்று வெள்ளிக்கிழமை என்பதால் 7 நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள். உங்களுடைய கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்