Categories
தேசிய செய்திகள்

வச்சிட்டாங்க ஆப்பு…! சரக்கு வாங்க இது முக்கியம்…. மதுபிரியர்களுக்கு ஷாக் நியூஸ்…!!!

நாடு முழுவதும் கொரோனா  பரவலை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் தடுப்பூசியை செலுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன. தடுப்பூசி போடாத பகுதிகளில் எண்ணிக்கையை மேலும் அதிகப்படுத்துவதற்காக அந்தந்த மாநில அரசுகள் அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அந்த வகையில் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஹண்ட்வா மாவட்டத்தில் மதுக்கடைகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாத மது பிரியர்களுக்கு இனி மது விற்பனை செய்யப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு அந்த மாவட்டத்தில் மொத்தமுள்ள 74 மதுக்கடைகளிலும் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. மது பிரியர்கள் மது பாட்டில் வாங்க வேண்டுமென்றால் இரண்டு தடுப்பூசிகள் போட்டதற்கான ஆதாரத்தை கடை ஊழியரிடம் காண்பிக்க வேண்டும். ஆதாரம் உண்மையாக இருந்தால் மட்டுமே அந்த நபருக்கு மதுபானம் வழங்க வேண்டுமென்று மாவட்ட கலால் அலுவலகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Categories

Tech |