உலக மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நடந்த இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் வீராங்கனை கார்பின் முகுருஜா சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.
டாப்-8 ‘வீராங்கனைகள் மட்டும் பங்குபெறும் உலக மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி மெக்சிகோவில் குவாடலஜரா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்ட 8 வீராங்கனைகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வந்தது . இதில் நேற்று முன்தினம் இரவு நடந்தத இறுதிப்போட்டியில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான ஸ்பெயினை சேர்ந்த கார்பின் முகுருஜா, 8-வது இடத்தில் உள்ள எஸ்தோனியாவை சேர்ந்த அனெட் கோன்டாவெய்ட்டை எதிர்த்து மோதினார்.
இதில் 6-3, 7-5 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்ற முகுருஜா சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.இப்போட்டி சுமார் 1 மணிநேரம் 38 நிமிடம் வரை நடந்தது. இந்த வெற்றியின் மூலம் 49 வருட மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் மகுடம் சூடிய முதல் ஸ்பெயின் வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இதனிடையே வெற்றிக்குப் பிறகு அவர் கூறும்போது” என்னால் சிறப்பாக செயல்பட முடியும் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளேன் இது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அதோடு இந்த வெற்றியின் மூலம் தரவரிசை பட்டியலில் நல்ல நிலைக்கு வந்துள்ளேன்” இவ்வாறு அவர் கூறினார்.