Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன இராசிக்கு.. “ஆரோக்கியம் சீராக இருக்கும்”… சிக்கல்கள் தீரும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..!! இன்று நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சிகள் அனைத்துமே வெற்றியை கொடுக்கும். தனவரவு தாராளமாக இருக்கும். ஆரோக்கியம் சீராக இருக்கும். நினைத்த காரியங்கள் நினைத்தது போல் நடக்கும். புத்தி சாதுரியம் மற்றும் வாக்கு வன்மையால் உங்களுடைய பொருளாதார நிலை மேம்படும். ஆராய்ச்சியாளர்களுக்கு அருமையான நாளாக இன்று இருக்கும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது மட்டும் நல்லது.

குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்பாடுகள் உங்களுக்கு கோபத்தை தூண்டுவதாக இருக்கும். அனைவரையும் அனுசரித்துச் செல்லுங்கள் அது போதும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் முன்னேற்றத்திற்காக பாடுபடுவீர்கள் பூர்வீக சொத்துக்களில் இருந்த சிக்கல்கள் தீரும். இன்றைய நாள் ஓரளவு முன்னேற்றகரமான நாளாகவே இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை விலகிச்செல்லும்.

ஆசிரியர்களின் சொல்படி மட்டும் நடந்து கொள்ளுங்கள் அது போதும். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது நீலநிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடியதாக இருக்கும். அது மட்டுமில்லை இன்று வெள்ளிக்கிழமை என்பதால் 7 நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக வழங்குங்கள். தயிர்சாதம் உங்களுடைய கர்ம தோசங்கள் அனைத்தையும் நீக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |