Categories
கால் பந்து விளையாட்டு

ஐ.எஸ்.எல் கால்பந்து : இன்று முதல் ஆரம்பம் ….! உற்சாகத்தில் கால்பந்து ரசிகர்கள் …!!!

11 அணிகள் பங்குபெறும் ஐ.எஸ்.எல்.கால்பந்து போட்டி இன்று முதல் கோவாவின் நடைபெறுகிறது .

8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி(ISL) இன்று முதல் நடைபெறுகிறது.கொரோனா தொற்று  விதிமுறைகளை பின்பற்றி சென்ற ஆண்டு நடந்ததைப் போல கோவாவில் உள்ள மூன்று மைதானங்களில் இப்போட்டி நடைபெறுகிறது .அதோடு போட்டியை நேரில் காண பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது .இன்று முதல் தொடங்கி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை போட்டி நடைபெறுகிறது .இந்திய வீரர்கள் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் என அனைவரும் இணைந்து விளையாடும் இப்போட்டியில் நடப்பு சாம்பியனான  மும்பை சிட்டி, ஏ.டி.கே.மோகன் பகான், சென்னையின் எப்.சி, பெங்களூரு, கோவா உட்பட 11 அணிகள் பங்கு பெறுகின்றன.

இதில் ஒவ்வொரு அணியும் தலா 2 முறை மற்ற அணிகளுடன் மோத வேண்டும் .இதில் லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறும். இது முதல் நாளான இன்று இரவு 7.30  மணிக்கு நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான ஏ.டி.கே. மோகன் பகான் – கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதுகின்றன .

Categories

Tech |