தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் செய்து வருகிறார். அனைத்து தரப்பு மக்களுக்கும் சம வாய்ப்பு வழங்கப்படுகிறது. மக்களின் குறைகளை முன்னதாகவே கண்டறிந்து அதனை முதல்வர் பூர்த்தி செய்து வருகிறார். அது மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் “நம்மை காக்கும் 48” என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்து வைத்துள்ளார். இதில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் 48 மணி நேரத்திற்க்கான சிகிச்சை செலவை அரசே ஏற்கும் என்று தெரிவித்துள்ளார். இந்தத் திட்டத்தால் பல்வேறு மக்கள் பயன்பெறுவார்கள்.