தமிழகத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதையொட்டி பள்ளிகளில் மாணவர்களுக்கான பாதுகாப்பு வழிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. பள்ளிகளில் மழையால் பாதித்த வகுப்பறை, சுற்று சுவரை மாணவர்கள் பயன்படுத்தாமல் உறுதி செய்ய வேண்டும். மின் இணைப்புகள் சரியாக இருப்பதை தலைமை ஆசிரியர்கள் உறுதிப்படுத்த வேண்டும். திறந்த நிலை நீர்த் தேக்கத் தொட்டி,கிணறு அருகில் மாணவர்கள் செல்லாமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
Categories