சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று தொழில் மற்றும் வியாபாரம் சம்பந்தமாக பெரியோர்களின் சந்திப்பு இனியதாக அமையும். எண்ணியபடி எண்ணிய காரியங்கள் ஏற்றத்தைக் கொடுக்கும். பெண்களால் நன்மை உண்டாகும். அதுபோக நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும். இன்று காரிய தடையால் மனக்குழப்பம் டென்சன் போன்றவை இருக்கும் அதை மட்டும் நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள். பொறுமையாக செயல்படுங்கள். பணவரவை பொருத்தவரை இன்று சிறப்பாகவே இருக்கும். மாணவர்கள் யாரிடமும் எந்தவித வாக்குவாதம் செய்யாமல் அனுசரித்து செல்வது நலம் பயக்கும். மிகவும் கவனமாக பாடங்களை மட்டும் படியுங்கள் வெற்றிக்கு உதவும்.
இன்றைக்கு கொஞ்சம் தடை தாமதம் வீண் அலைச்சல் இருக்கும். எப்பொழுதுமே நீங்கள் நிதானமாக இருந்தால் அனைத்து காரியமும் சிறப்பாக இருக்கும். துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுக்கக்கூடும். கூடுமானவரை பெரியவர்களிடம் ஆலோசனை கேட்டு செய்யுங்கள். உங்கள் பேச்சிற்கு மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். பஞ்சாயத்துக்கள் சொல்வீர்கள். அந்த பஞ்சாயத்துக்கள் நல்ல முடிவை கொடுக்கும். இன்று நீங்கள் செய்யக்கூடிய காரியங்களுக்கு நிதானத்தை மட்டும் பின்பற்றினால் அனைத்துமே சிறப்பாக இருக்கும்.
ஒருமுறைக்கு இருமுறை யோசனை செய்யுங்கள் தப்பில்லை. இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்ககூடியதாக இருக்கும். அது மட்டுமில்லை வாராவாரம் வெள்ளிக் கிழமையானால் 7 நபர்களுக்கு தயிர் சாதத்தை மட்டும் அன்னதானமாக கொடுங்கள். உங்களுடைய கர்ம தோசங்கள் அனைத்தும் நீங்கும். நீங்கள் செய்யக்கூடிய காரியங்கள் வெற்றி ஏற்படும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு
அதிஷ்ட எண் : 6 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் வெள்ளை நிறம்