தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை கரையை கடந்தது. அதனால் நேற்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இடைவிடாது கன மழை கொட்டி தீர்த்தது. கனமழை காரணமாக மாணவர்களின் நலன் கருதி இன்று பெரும்பாலான மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், நீலகிரி, விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருப்பத்தூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கடலூர், செங்கல்பட்டு, அரியலூர் ஆகிய 3 மாவட்டங்களில் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.