Categories
உலக செய்திகள்

‘இனி இவர்களுக்கும் செலுத்தலாம்’…. நோய் தடுப்பு மற்றும் கட்டுபாட்டு மையத்தின்…. இயக்குனர் வெளியிட்ட தகவல்….!!

பூஸ்டர் தடுப்பூசியானது 18 வயதான அனைவருக்கும் விரைவில் செலுத்தப்படவுள்ளது என தகவல்கள் வெளிவந்துள்ளது.

அமெரிக்காவில் குறைவான நோயெதிர்ப்பு சக்தி உள்ள 65 வயதான பெரியவர்களுக்கும் சுகாதார பணியாளர்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இது கொரோனா தொற்றை தடுப்பதில் சிறந்த பலனை அளிக்கிறது என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து தற்பொழுது 18 வயதானவர்களுக்கும் தடுப்பூசி செலுத்துவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.

இது குறித்து CDC என்னும் நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையத்தின் இயக்குனர் ரோச்செல்லி வாலன்ஸ்கி கூறியதில் “18 வயதான அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கான விவரங்கள் குறித்து FDA என்னும் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ஆராய்ந்து வருகிறது. அதே நேரத்தில் அவர்கள் எப்போது பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவது என்பது பற்றிய காலவரையும் முடிவு செய்யப்படவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

இந்த வாரமே அதற்கான அங்கீகாரத்தை CDC மற்றும் FDA வழங்கும் என்று அமெரிக்க செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஆகவே விரைவில் 18 வயதானவர்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கிவிடும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக கலிபோர்னியா, நியூ மெக்சிகோ, ஆர்கன்சாஸ், மேற்கு வெர்ஜீனியா போன்ற மாகாணங்களில் பூஸ்டர் தடுப்பூசியானது 18 வயதான அனைவருக்கும் செலுத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

Categories

Tech |