Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஹிட் இயக்குனருடன் மீண்டும் இணையும் நாக சைதன்யா… ஹீரோயின் இந்த தமிழ் நடிகையா?…!!!

நாக சைதன்யா அடுத்ததாக நடிக்கும் படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நாக சைதன்யா. கடைசியாக இவர் நடிப்பில் வெளியான லவ் ஸ்டோரி படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடித்திருந்தார். தற்போது நாக சைதன்யா தேங்க் யூ, லால் சிங் சட்டா போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நாக சைதன்யா அடுத்ததாக நடிக்கும் படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இவரது அடுத்த படத்தை விக்ரம் குமார் இயக்க இருக்கிறார்.

Priya Bhavani Shankar: Delighted to have done a different role in Mafia | Tamil Movie News - Times of India

ஏற்கனவே விக்ரம் குமார் இயக்கத்தில் நாக சைதன்யா நடிப்பில் வெளியான மனம் படம் சூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. தமிழில் பிரியா பவானி சங்கர் மேயாத மான், கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், ஓ மணப்பெண்ணே போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்தார். தற்போது நாக சைதன்யா படத்தின் மூலம் பிரியா பவானி சங்கர் தெலுங்கில் அறிமுகமாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |