வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு அதிக அளவு பணம் அனுப்பப்படுவதாக உலக வங்கி தகவல் தெரிவித்துள்ளது.
இந்தியாவிற்கு இந்த ஆண்டு அதாவது 2021ல் மட்டும் வெளிநாடுகளில் இருந்து சுமார் 87,00,00,00,000 டாலர் அனுப்பப்ப்பட்டுள்ளது என்று உலக வங்கி தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இது இந்திய மதிப்பில் சுமார் ஆறு லட்சத்து ஐம்பதாயிரம் கோடி ரூபாய்க்கு சமமானது என்றும் கூறப்படுகிறது.
குறிப்பாக அமெரிக்கா, சவுதி அரேபியா, குவைத் போன்ற வெளிநாடுகளில் பணியாற்றும் இந்தியர்கள் தங்கள் தாயகத்திற்கு அனுப்பிய தொகையின் அடிப்படையில் இந்த மதிப்பானது கணக்கிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சீனா, மெக்ஸிகோ, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு வெளிநாடுகளில் இருந்து அதிக அளவு பணம் அனுப்பப்படுகிறது என்று உலக வங்கி தெரிவித்துள்ளது. குறிப்பாக தாயகத்திற்கு அதிக பணம் அனுப்பும் நாடுகளில் இந்தியா முதன்மை வகிக்கிறது.