Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இந்திய அணியை சிறந்த அணியாக மாற்றுவார்”….! ராகுல் டிராவிட்க்கு கம்பீர் புகழாரம் ….!!!

இந்திய அணியை சிறந்த அணியாக ராகுல் டிராவிட்  மாற்றுவார் என முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் ராகுல் டிராவிட்  நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது அவரது தலைமையில் இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான  டி20 போட்டி நடைபெற்று வருகிறது .இதில் நேற்று முன்தினம் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது .இதில் போட்டிக்கு  முன்னதாக கவுதம் கம்பீர் கூறுகையில்,” இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட் வெற்றிகரமான பயிற்சியாளராக செயல்படுவார் .

அவர் இந்திய அணியில் ஒரு வெற்றிகரமான வீரராகவும், கேப்டனாகவும்  செயல்பட்டுள்ளார் . அதேபோல்  தற்போது வெற்றிகரமான பயிற்சியாளராகவும் மாறப் போகிறார் என நம்புகிறேன். அதோடு அவர் கேப்டனாக விளையாடிய போட்டிகளிலும் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார்.  டிரெஸ்சிங் ரூமில் ராகுல் டிராவிடுடன்  இருப்பது வீரர்களுக்கு மிகுந்த நம்பிக்கையை அளிக்கக்கூடியதாக இருக்கும் .அதோடு அவர் இந்திய அணியை சிறந்த அணியாக மாற்றுவார்” இவ்வாறு கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |