நடிகர் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படம் பிப்ரவரி 4ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இந்த படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் நாயகியாக அருள்மோகன் நடித்து வருகிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்து விட்டதாக இயக்குனர் பாண்டியராஜ் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இதற்கான அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி சூர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வரும் 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4-ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.