மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டில்லியில் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் 1 வருடத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் பிரதமர் மோடி அவர்கள் இந்த 3 வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். நாடாளுமன்றத்தில் வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை காத்திருப்போம் என விவசாய சங்க தலைவர் ராகேஷ் திகாயத் தெரிவித்துள்ளார். மேலும் 3 வேளாண் சட்டங்களை தவிர விவசாயிகளின் பிற பிரச்சினைகள் குறித்தும் அரசாங்கம் பேச வேண்டும் என அவர் டுவிட் செய்துள்ளார். போராட்டம் உடனடியாக திரும்பப்பெறப்படாது என டெல்லி எல்லையில் போராடும் விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து 7 ஆண்டுகளாக தான் எடுத்த எந்த ஒரு முடிவில் இருந்து பின் வாங்காத பிரதமர் மோடி விவசாயிகளின் தொடர் போராட்டத்தால் விவசாய சட்டத்தை திரும்ப பெற்றுள்ளார். இது டெல்லி எல்லையில் போராடி வந்த விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மத்திய அரசுக்கும் இடையே நடந்த இந்த போராட்டத்தில் விவசாயிகள் வெற்றி பெற்றுள்ளனர்.