Categories
மாநில செய்திகள்

மாநிலம் முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்தம்…. தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் மாற்றங்களுக்காக கூடுதல் சிறப்பு முகாம்கள் மாநிலம் முழுவதும் நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பெயர், முகவரி உள்ளிட்ட விபரங்களை சரி செய்ய வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. அதில் தங்கள் பெயர் உள்ளதா என்பதை சரிபார்த்து, மாற்றங்கள் மற்றும் திருத்தங்கள் செய்ய வேண்டும் என்றால், தற்போது நடைபெறுகின்ற வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் அதற்கான வாய்ப்பு வழங்கப்படுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் வாக்காளர் பட்டியல் மாற்றங்களுக்காக கூடுதல் சிறப்பு முகாம்கள் மாநிலம் முழுவதும் நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். அதன்படி நவம்பர் 1 முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 5ஆம் தேதி வரை மாநிலம் முழுவதும் நடைபெறுகிறது. வாக்காளர்கள் தங்கள் பெயரை சேர்ப்பதற்கும், வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கும் வசதியாக நவம்பர் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் வாக்குச்சாவடி  இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றது.

ஆனால் கனமழை காரணமாக சில மாவட்டங்களில் சிறப்பு முகாம்கள் தொடர்பான நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தகுதி வாய்ந்த வாக்காளர்கள் தங்களது பெயரை சேர்ப்பதற்கு மற்றும் திருத்தங்கள் மேற்கொள்வது ஊக்குவிக்கும் விதமாக வருகின்ற 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் கூடுதலாக சிறப்பு முகாம்கள் மாநிலம் முழுவதும் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Categories

Tech |