‘ஜெயம்’, ‘எம். குமரன் சன் ஆஃப் மாகாலட்சுமி’, ‘சந்தோஷ் சுப்ரமணியம்’, ‘தனி ஒருவன்’ போன்ற ப்ளாக் பஸ்டர் திரைப்படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்த இயக்குநர் மோகன் ராஜா இறுதியாக ‘வேலைகாரன்’ திரைப்படத்தை 2017ஆம் ஆண்டு இயக்கினார். இயக்குநராக மட்டுமில்லாமல், 2014ஆம் ஆண்டு வெளியான ‘என்ன சத்தம் இந்த நேரம்’ என்னும் திகில் திரைப்படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார்.
தற்போது அறிமுக இயக்குநர் வெங்கட கிருஷ்ணா ரோகன்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ திரைப்படத்திலும், மோகன் ராஜா தனது நடிக்கும் திறமையைக் காட்டப்போகிறார். இப்படத்தில் இயக்குநர் மகில்திருமேனி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளார்.