Categories
மாநில செய்திகள்

JUSTIN: வேளாண் சட்டம் வாபஸ்…  தீர்மானம் நிறைவேற்றிய 3 மாதங்களில் கிடைத்த பலன்”… அப்பாவு பெருமிதம்..!!!

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை பிரதமர் மோடி திரும்பப் பெற்றது வரவேற்கத்தக்கது என்று சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவை சபாநாயகர்கள் மாநாடு மாநாடு சிம்லாவில் நடைபெற்றது இதில் பங்கேற்ற தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு இன்று சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் கூறியதாவது: “மாநிலங்களில் சட்டப்பேரவை நிகழ்வுகள் குறித்து விவாதிக்க சபாநாயகர் மாநாடு நடைபெற்றது. அதில் நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டுள்ள தீர்மானங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாநிலங்களில் இருந்து தீர்மானங்கள் குடியரசுத் தலைவருக்கு அல்லது மத்திய அரசிற்கும் அனுப்பினால் எதற்கு நிராகரிக்கப்படுகிறது, ஏன் காலதாமதம் ஆகிறது என்பது குறித்து மத்திய அரசு தரப்பிலிருந்து விளக்கம் தரவில்லை.

இதற்கான விளக்கத்தை கட்டாயம் மத்திய அரசு தர வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. தற்போது 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றது வரவேற்கக் கூடிய விஷயம். கடந்த ஆகஸ்ட் மாதம் திமுக சார்பில் சட்டப்பேரவையில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுபோல பல மாநிலங்களில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஒரு முடிவு எடுக்க புள்ளி வைத்தால் போதும் பின் ஒரு நாளில் பலன் கிடைக்கும் அந்த பலன் தற்போது கிடைத்துள்ளது” என்று சட்டப் பேரவைத் தலைவர் கூறினார்.

Categories

Tech |