மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டில்லியில் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் 1 வருடத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் பிரதமர் மோடி அவர்கள் இந்த 3 வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இந்த அறிவிப்பிற்கு அரசியல் கட்சியினர் பலரும் தங்களுடைய கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முதல்வர் மு.க ஸ்டாலின் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறப் போவதாக மாண்புமிகு பிரதமர் மோடி அவர்கள் அறிவித்துள்ளதை வரவேற்கிறேன். இது முழுக்க முழுக்க உழவர்களின் அறப் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. மக்கள் ஆட்சியில் மக்களின் எண்ணங்கள் தான் மதிக்கப்பட வேண்டும். இதுவே வரலாறு சொல்லும் பாடம் என்று தெரிவித்துள்ளார்.