பாகிஸ்தானில் இனி பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு ஆண்மை நீக்கம் செய்வதற்கான புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
சமீப காலங்களாக குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பாகிஸ்தான் நாட்டில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் பாலியல் குற்றத்தில் ஈடுபடும் நபர்களுக்கு ஆண்மை நீக்கம் ரசாயன முறையில் செய்வதற்கான புதிய சட்டத்தினை பாகிஸ்தான் அரசு கொண்டு வந்துள்ளது.
மேலும் இந்தச் சட்டம் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு கடுமையான தண்டனை அளிப்பதற்காகவே கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஒரு ஆண்டிற்கு முன்பு பிரதமர் இந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ள நிலையில் நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி மசோதாவில், பாலியல் குற்றத்தில் ஈடுபடும் நபர்கள் எந்த கால கட்டத்திலும் உடலுறவு கொள்ள முடியாத வகையில் இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.