புதிய திருத்தங்களோடு மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டில்லியில் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் 1 வருடத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் பிரதமர் மோடி அவர்கள் இந்த 3 வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் நாடாளுமன்றத்தில் வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை காத்திருப்போம் என விவசாய சங்க தலைவர் ராகேஷ் திகாயத் தெரிவித்துள்ளார். மேலும் 3 வேளாண் சட்டங்களை தவிர விவசாயிகளின் பிற பிரச்சினைகள் குறித்தும் அரசாங்கம் பேச வேண்டும் என அவர் டுவிட் செய்துள்ளார்.
BUK என்னும் விவசாய அமைப்பின் செய்தி தொடர்பாளர் தான் ராகேஷ் தியாகத். கடந்த குடியரசு தின விழாவில் நடந்த விவசாயிகள் பேரணி வன்முறையில் முடிந்த பிறகு பல விவசாய சங்கங்கள் போராட்டத்தில் இருந்து பின்வாங்கின. ஆனால் இவர் டெல்லி காஜிப்பூர் எல்லையில் முகாம் அமைத்து “இங்கு எனது உயிர் போகுமே தவிர நான் பின்வாங்க மாட்டேன் ” என்று முழங்கினார். இன்று மோடி அரசு வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்று பின்வாங்கி விட்டது.