தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட தமிழகத்தில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த சில மணி நேரத்தில் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக்கூடும்.
அதனால் அடுத்த 24 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக அதிக கனமழை பெய்யும். மேலும் ஈரோடு, சேலம், வேலூர், தர்மபுரி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும். இதையடுத்து நாளை நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.