தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. அதனால் அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது. கடந்த ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் தேர்வுகள் நடத்தப்பட்டன. தற்போது கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளதால் இந்த ஆண்டு மாணவர்களுக்கு நேரடி முறையில் செமஸ்டர் தேர்வுகள் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அதில் மாணவர்களுக்கு வருகின்ற டிசம்பர் மாதம் நேரடி தேர்வு நடத்த உள்ளதாக உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து அனைத்து தொழிற்கல்வி கல்லூரிகளும் தற்போது மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு தேதியை அறிவித்து வருகின்றனர்.
அதன்படி தமிழகத்தில் ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக இணைப்பு பெற்ற கல்லூரிகளில் நவம்பர் 29ஆம் தேதி செமஸ்டர் தேர்வுகள் தொடங்குகிறது. நடப்பு கல்வி ஆண்டில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 29ஆம் தேதி தொடங்கும் செமஸ்டர் தேர்வுகள் டிசம்பர் 6-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கும் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.