Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. இனி தனியார் மருத்துவமனைகளில் இலவசம்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி….!!!!

தமிழகத்தில் சாலை விபத்துகளில் சிக்குபவர்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை வழங்குவது தொடர்பாக அரசு திட்டமிட்டுள்ளது. சாலை உயிரிழப்புகளை தடுத்தல் மற்றும் விபத்துக்களை குறைத்தல் ஆகியவை குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ஒரு லட்சம் மக்கள் தொகையில் சாலை விபத்துகளில் இறப்பு விகிதம் 23.9 என்று இருப்பது குறைக்கப்பட வேண்டும். சாலைப் பயணங்கள் பொது மக்களுக்கு மிக பாதுகாப்பான ஒன்றாக அமையும் வகையில் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.

சாலை விபத்துக்களை தவிர்க்க சாலை பாதுகாப்பு ஆணையம் என்ற ஒருங்கிணைந்த அமைப்பு உருவாக்கப்படும். சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் 48 மணி நேரத்திற்கான அவசர மருத்துவ கண்காணிப்பை அரசு மேற்கொள்ளும் வகையில் முதல் 48 மணி நேர அவசர உயிர் காக்கும் உயர் சிகிச்சைகள் இலவச மருத்துவ உதவி திட்டம் செயல்படுத்தப்படும். இந்த திட்டத்திற்காக சாலையோரங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகள், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் என மொத்தம் 650 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளது.

முதல்வரின் மருத்துவக் காப்பீடு அட்டை இல்லாதவர்களும் பிற மாநிலத்தவர்,வேறு நாட்டவர் என யாவருக்கும் இந்த திட்டத்தின் கீழ் மருத்துவம் செய்யப்படும். 12 மாத காலத்திற்கு இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு அதன் பிறகு வருடாந்திர செலவினம் மதிப்பாய்வு செய்து முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் இணைக்க திட்டமிட்டுள்ளது

Categories

Tech |